வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு.!

Default Image

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ரயில் மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில், புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்ட களத்திற்கு நேரில் வந்த புதுச்சேரி முதல்வர், போராட்டத்தை அமைதியான முறையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும், புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia