புதுச்சேரியில் இன்று முதல் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்றவைகளை மூட முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசியல் கட்சி ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் போன்றவைகளுக்கு மார்ச் 31-ஆம் வரை நடத்த கூடாது என்றும் மால்கள், நீச்சல் குளம், திரையரங்குங்கள் என ஆகியவைகளை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று (19-03-2020) முதல் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அமர்ந்து மது அருந்தக்கூடிய மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.மேலும் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…