வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2ம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் டிசம்பர் 4 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஏற்கனவே, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
59 இடங்களில் கனமழை.. 19 இடங்களில் மிக கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
இந்த நிலையில், வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் டிசம்பர் 4ம் தேதி சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிச.3 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், டிச.4 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் கனமழையை ஒட்டி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பெயரை பயன்படுத்த மாட்டோம் .. ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம்!
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூறியதாவது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும். சாலைகள், சுரங்கபாதைகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட மின் மோட்டார்களை வைத்து கொள்ள வேண்டும். சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்பு படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் 8 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…