முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்…! எப்போது தெரியுமா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 26, 27 தேதிகளில் துபாய் பயணம் செல்கிறார்.
துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் மாபெரும் கண்காட்சி இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 26, 27 தேதிகளில் துபாய் பயணம் செல்கிறார்.
கண்காட்சியில் கைத்தறி, விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் வகையில் தமிழகம் சார்பில் அரங்கம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.