#BREAKING: நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்..!
நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அனைத்துக் கட்சிக் குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று பிற்பகல் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக பேசவுள்ளனர்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் வரும் 18-ம் தேதி டெல்லி செல்கிறார். பிரதமரை சந்தித்து முதல்வர் மேகதாது விவகாரம் தொடர்பாக வலியுறுத்த உள்ளார். மேகதாது அணைக்கு அனுமதி கேட்டு பிரதமரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று சந்திக்க உள்ள சூழலில் தமிழக முதல்வரும் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.