அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

Default Image

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பட்டியலில் டாப் சாதனையாளர்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர், பக்கத்தில், தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. புள்ளி முறைப்படி 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குழு, தமிழகத்தில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொண்டதாக வாழ்த்து கூறி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்