தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக முன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு வருகிறார். சற்று நேரத்திற்கு முன் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ப்ரையண்ட் நகரில் முதல்வர் வெள்ள பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…