ஓபிஎஸ் செய்யும் காரியங்கள் அதிமுக தொண்டர்களை மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளது என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் மீது பாட்டில் வீசப்பட்டதற்கு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக கண்டித்து அமைதிப்படுத்தினார். யாரையும் அவமதிக்கும் நோக்கம் தொண்டர்களுக்கு கிடையாது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது.
பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஓபிஎஸ் அவர்கள் மன உளைச்சலில் இருப்பதாக கூறினார். அவருக்கு ஏன் வீண் மன உளைச்சல். ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள். அனைவரும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுப்பது போல கட்சியினரும் ஆதரவு கொடுத்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. ஓபிஎஸ் செய்யும் காரியங்கள் அதிமுக தொண்டர்களை மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடாது. அதை அதிமுக அனுமதிக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுக வை அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…