#BREAKING: 9 மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவரும் துறைமுக மசோதாவை 9 கடலோர மாநிலங்களும் எதிர்க்க வேண்டும் என ஒன்பது மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் புதிய சட்ட முன்வடிவு மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய கடலோர மாநிலங்களை சார்ந்த 9 மாநில முதல்வருக்கு கடிதம் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.