வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து 790 கிலோமீட்டர் கிழக்கு தெற்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்க உள்ளது. அதன்படி, தெற்கு ஆந்திரா வட தமிழகத்தில் சென்னைக்கும், மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மற்றும் மழையையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை தமிழ் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துறைசார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் புயலால் ஏற்படும் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பல்துறை மண்டல குழுக்களை அமைக்க வேண்டும். மழை, வெள்ள காலங்களில் மின்கசிவு ஏற்படுவதை தடுக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவரச சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை காலங்களில் போக்குவரத்தை சரிசெய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…