கல்லணையில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
- கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு செய்து வருகிறார்.
கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னையில் இருந்து தனி விமானத்தின் மூலம் திருச்சி வந்து இறங்கிய முதல்வரை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி உள்ளிட்ட தமிழக அமைச்சர்களும், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் அவருக்கு அங்கு வரவேற்பு கொடுத்தார்கள்.
அரசியல் கட்சியைச் சேர்ந்த யாரும் வரவேற்பதற்காக வரவேண்டாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், முதல்வர் பார்வையிட கூடிய இடத்தில் கூட அரசியல் கட்சியினர் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை, அதிகாரிகள் மட்டுமே வந்துள்ளனர்.
இந்த ஆய்வுப் பணிகளை முடித்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார். இதைத் தொடர்ந்து நாளை மேட்டூர் அணைக்கு சென்று அங்கு அதிகாரிகளின் ஆலோசனை நடத்திய பின்னர் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.