முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!

Published by
murugan

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்மஸ்ரீ எம். அனந்த கிருஷ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் (92) கடந்த ஒரு வாரமாக நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்மஸ்ரீ எம். அனந்த கிருஷ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாணியம்பாடியில் பிறந்து இந்தத் தரணி போற்றும் வகையில் – நேர்மையான அறிவுக்கூர்மை மிகுந்த கல்வித்தொண்டாற்றிய அவர் மாணவ சமுதாயத்தின் கலங்கரை விளக்கம். காள்பூர் ஐ.ஐ.டி.யின் தலைவராக இருந்த அவரை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்தார். அப்பணியில் இருந்த போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை அளிக்கும் உன்னத உட்கட்டமைப்பை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழை உலகெங்கும் பரப்பியவர் திரு அனந்தகிருஷ்ணன்.

“வெளிப்படைத்தன்மை மிகுந்த நிர்வாகம் – மாணவர்களின் கல்வி முன்னேற்றம்” ஆகிய இரண்டையும் தனது இரு கண்கள் போல் கருதி எந்தப் பொறுப்பிலும் பணியாற்றிய அவர்தான் கழக ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்குக் காரணமான கதாநாயகனாக இருந்தவர். திரு அனந்தகிருஷ்ணன் கொடுத்த அறிக்கைதான் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கண்களைத் திறந்தது என்பதை இன்று பொறியாளர்களாக இருக்கும் – மருத்துவர்களாக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற – நடுத்தர ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் நன்கு உணருவர்.

அது மட்டுமின்றி- அவர் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பப் புரட்சி நடைபெறுவதற்கான முதலமைச்சரின் ஆலோசகராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியவர். பொறியியல் கல்விச் சேர்க்கையில் ஒற்றைச் சாளரமுறையை முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கும், தமிழ் இணைய மாநாடு நடத்தி, இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப் படுத்துவதற்கான ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்.

“அறிவுக்களஞ்சியம்” என்று அழைக்கப்படும் திரு. அனந்தகிருஷ்ணன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் போற்றிய தலை சிறந்த கல்வியாளர். ஏன். இந்த நாடே போற்றும் நிர்வாகத் திறன் படைத்தவர். அர்த்தமிகுந்த- அறிவுசார்ந்த கல்வி கட்டமைப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் தனது இறுதி மூச்சு வரை பயணித்த தமிழகத்தின் பெருமைக்குரிய கல்வியாளரை இழந்திருப்பது கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

டாக்டர் மு. அனந்தகிருஷ்னான் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும் – உறவிளர்களுக்கும் – ஆசிரியர், பேராசிரியர் மற்றும் இன்று அவரை அவர் மீது தீராத அன்பு செலுத்தி வரும் மாணவ சமுதாயத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

2 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

2 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

3 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

3 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

4 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

4 hours ago