முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு – தமிழக அரசு
முதல்வர் ஸ்டாலினின் 4 தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் 4 தனி செயலாளர்களுக்கு தற்போது துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, உதயச்சந்திரன் – உள்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகளும், அனு ஜார்ஜ் – விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல், சமூக நலம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளும், உமாநாத் – போக்குவரத்து, நிதி, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளும், சண்முகம் -வருவாய், சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வேளாண் உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலினின் நான்கு தனிச்செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!#MKStalin | #TamilNadu pic.twitter.com/Q2XVvZiMXL
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 11, 2021