ஊரடங்கு தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்ததையடுத்து, முதல்வர் மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் படிப்படியாக குறைய தொடங்கியது.
ஊரடங்கால் கொரோனா குறைய குறைய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் போன்றவைகளுக்கு தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதியோடு முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கவுள்ளார். நாளை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.
மேலும், இதில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கு பெறவுள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக ஊரடங்கு குறித்த தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…