மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது என்றும் இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2-வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் 5% அடிப்படை சுங்க வரி, 5% விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூக நல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11% ஆக உயர்ந்த்தே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருதுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், வேலை இழப்பைத் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய ஐவுளித் துறை அமைச்சர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…