பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து எடுத்துரைத்து. உடனடியாக நிலுவைத் தொகையினை மாநிலத்திற்கு விடுவிக்கக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் எழுதியுள்ளார்கள்.
அக்கடிதத்தில், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 2021-2022 ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15.09.2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து, அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால், 1-11-2021 அன்றுள்ளவாறு 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.