தூத்துக்குடி சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் 3-வது பெரிய துறைமுகமாக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது. அதனால்தான் அறைகலன் பூங்காவை இங்கு அமைக்க திட்டமிட்டோம். வ.உ.சியின் பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக அறைகலன் பூங்கா அமையும் நாள் இருக்கும்.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் அறைகலன் பூங்கா அமைய உள்ளது பெருமைக்குரியது. நகரங்கள் மாநகரங்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டின் வளத்தை பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே நமது அரசின் நோக்கம்.
திராவிட மாடல் இலக்கை நோக்கி நாம் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். தொழில் வளர்ச்சியை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது. பெல்ஜியம் நிறுவனம் ரூ.450 கோடி முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது.
கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும் என தெரிவித்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…