கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 3 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை நேரில் சென்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 364 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இருப்பினும் சில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் தான் காணப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை அதாவது வியாழக்கிழமை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் போது கொரோனா தடுப்பு குறித்த நடவடிக்கைகல் பற்றி முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.