#BREAKING: சற்று நேரத்தில் ஆளுநரை சந்திகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார்.
ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க கிண்டி ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். கொரோனா நிவாரண நிதிக்கு ஆளுநர் ஒரு கோடி வழங்க உள்ளதாகவும் , ஆளுநர் வழங்கும் நிதியை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகிஉள்ளது.
அதே நேரத்தில்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.