சாலையோர சென்ற பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மேலும் கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து, வீட்டுக்கு புறப்பட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், அண்ணா சாலையில் சென்றபோது சாலை யோரமாக காரை நிறுத்த சொல்லி, திடீரென முதலமைச்சர் காரைவிட்டு இறங்கி நடந்து சென்று பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கினார். இதுபோன்று ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய, அனைவரும் தவறாமல் முகக்கவசத்தை அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது சிலர் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் முக கவசம் வழங்கி அணிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியது மட்டுமில்லாமல் முகக்கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்துவதற்காக, சென்னை சிம்சன் சந்திப்பில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்தவருக்கு முதலமைச்சரே முகக்கவசம் அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…