கொளத்தூர் தொகுதியில் வயதான தம்பதியினர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னையில் நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வயதான தம்பதியினரின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில், கொளத்தூர் தொகுதியில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்ற போது, வயதான தம்பதியினர் அவர்களது வீட்டு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தம்பதியினரின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த தம்பதியினரிடம் நலம் விசாரித்தார்.