முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published by
லீனா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் சாலையில்,திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிலையில், அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்குப் பிறகு முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் சிலர் செய்த செயலால் வருத்தம் தெரிவித்தேன். பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை திமுகவினர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை திருப்தி செய்வதற்காக மட்டும் திமுகவினரை எச்சரிக்கவில்லை. திருந்தாவிட்டால் நடவடிக்கையை நிச்சயம். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன். பிறர் பாராட்டும் வகையில் பணி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

10 minutes ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

18 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

55 minutes ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

1 hour ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

1 hour ago

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

2 hours ago