முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி பயணம்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி செல்லும் அவர் திமுக மாவட்ட அலுவலகத்தில் கலைஞரின் வெண்கல சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த சிலையானது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணியளவில் ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.