இன்று திருவாரூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருவாரூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு இன்று செல்கிறார்.

அதன்படி, மதியம் சாலை வழியாக திருவாரூர் சென்று, மறைந்த கருணாநிதி அவர்களின் இல்லத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். பின் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மரியாதை செலுத்துகிறார். பயணத்தை முடித்து விட்டு நாளை சென்னை திரும்ப முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்