வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசண்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வண்டலூரில் வரும் 20 ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்கிறார். 400-க்கும் மேற்ப தனியார் நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.