நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று நாடாளுமன்றம் சென்ற முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி, இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி, ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசியதாக தகவல் கூறப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். இதன்பின் டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை கெஜ்ரிவாலுடன் இணைந்து முதலமைச்சர் பார்வையிடுகிறார். ஏப்.2-ம் தேதி மாலை 5 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…