முதல்வர் மு.க.ஸ்டாலின் – திருமாவளவன் சந்திப்பு…! வாழ்த்து பெற்ற விசிக வேட்பாளர்கள்..!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் முதல்வரை சந்து வாழ்த்து பெற்றார்.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அந்த வகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். இந்த நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், விசிக சார்பில் போட்டியிட்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.