ஓபிஎஸ் -ன் நல்லெண்ணத்திற்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

இலங்கைக்கு நிதியுதவி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உயிர் காக்கும் மருந்து உள்ளிட்டவை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தமிழர்கள் மனித நேயத்தில் உலகத்திலேயே மிகவும் உயர்ந்தவர்கள் என்பதன் அடையாளமாக இந்த தீர்மானம் உள்ளது. அரசால் வழங்கப்படும் ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரண நிதி உடன் நான் சார்ந்துள்ள குடும்பத்தின் சார்பாக ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக தருகிறேன் என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ்-ஸின் இந்தப் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.மற்றவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இதனை அறிவித்துள்ளார். அவருடைய நல்ல எண்ணத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்