தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்பி வேலுமணி தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும். 3 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே, தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
பெண்களுக்கு கல்விதான் நிரந்திர சொத்து
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்களுக்கு கல்விதான் நிரந்திர சொத்து, அதன் காரணமாகவே தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்திர சொத்து வேண்டும். பெண்ணுரிமை என்ற அடிப்படையில் தான் திருமண உதவி திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம் என்று விளக்கமளித்தார்.
முதல்வருக்கு நன்றி
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிபேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சிலமூடர்-நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம் பேதமை யற்றிடும் காணீர்”பாரதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும்,அன்பும்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…