முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், அன்பும்…! – ஜோதிமணி எம்.பி

Default Image

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்பி வேலுமணி தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும். 3 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே, தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

பெண்களுக்கு கல்விதான் நிரந்திர சொத்து

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்களுக்கு கல்விதான் நிரந்திர சொத்து, அதன் காரணமாகவே தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்திர சொத்து வேண்டும். பெண்ணுரிமை என்ற அடிப்படையில் தான் திருமண உதவி திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம் என்று விளக்கமளித்தார்.

முதல்வருக்கு நன்றி 

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிபேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சிலமூடர்-நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம் பேதமை யற்றிடும் காணீர்”பாரதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கு நன்றியும்,அன்பும்!’ என பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்