அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

நீட் தேர்வு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜகவைப் போல் அதிமுகவும் புறக்கணித்தது எஜமான விசுவாசம் முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.

mk stalin vs eps

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஈடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், அதிமுக புறக்கணித்த நிலையில், பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது.

இந்த நிலையில், பாஜகவினர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் நீட்டுக்கு எதிரான கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர் என்று அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அவரது பதிவில், ”சமூகநீதியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். சமூகநீதிக்கும் – மாணவர்களுக்கும் – மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான தி.மு.கழகம், நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது

நீட் தேர்வு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜகவைப் போல் அதிமுகவும் புறக்கணித்தது எஜமான விசுவாசம்.
ஆளுநரின் அதிகாரத்தை தெளிவாக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு தொடக்கம், நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். நீதியின் வாயிலாக ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் பாதுகாக்க தி.மு.க தன் போராட்டத்தைத் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்