எம்மதமும் சம்மதம் என்று ஆட்சி புரிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் சேகர்பாபு

ஆன்மீக அன்பர்கள் முதலமைச்சரை மனதார வாழ்த்துகின்றனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருவிதம்.
தமிழகத்தில் முழு ஊரடங்கிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டுமே கும்பாபிஷேகம் விழாவில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காண்பதற்காக வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
வடபழனி முருகன் கோயிலில் நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வடபழநினி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கொரோனா தொற்று குறையும் போது இறை அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோயில்கள் அனைத்து நாட்களிலும் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
எம்மதமும் சம்மதம் என்று ஆட்சி புரிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்குமானவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். 50-க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதால், ஆன்மீக அன்பர்கள் முதலமைச்சரை மனதார வாழ்த்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025