நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு, விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதகையில் பழங்குடியின மக்கள் 21,800 பேர் தடுப்பூசி போட தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். இவர்களில் அனைவருமே ஜூன் 29-ம் தேதி மாலையுடன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.