மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை.!
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் மற்றும் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆண்டு தோறும் தமிழகத்தில் குடியரசு தினத்திற்கு முந்தைய நாளான ஜனவரி 25ஆம் தேதி தமிழ் மொழிக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவாக மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் மற்றும் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
இந்த தினத்தினை முன்னிட்டு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில், மொழிப்போர் தியாகிகள் உருவப்படிதத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் என பலர் கலந்துகொண்டனர். அவர்களும் தியாகிகள் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூரில் நடைபெற உள்ள மொழிப்போர் மற்றும் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார்.