#BREAKING: உடனடியாக ராஜினாமா செய்ய முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
அதில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ‘ராஜினாமா’ செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மறைமுகத் தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக போட்டி வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும்-முதல்வர் ..!#MKStalin #DMK pic.twitter.com/oIA0j7i83h
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) March 4, 2022