குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!!

Default Image

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வரும் 19ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார்.

கர்நாடகா மேகதாதுவில் அணை தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்றுள்ள நிலையில், இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளனர். தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் வரும் 18ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வலியுறுத்த உள்ளார்.

இந்த நிலையில், நாளை மறுநாள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வரும் 19ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக குடியரசு தலைவரை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசவுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07 03 2025
TVKVijay - Iftar
rohit sharma retirement
tvkvijay
annamalai BJP
busaccident
Kingston Review