ஆளில்லா வான்வழி வாகன கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக சூரிய சக்தி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன ஆளில்லா விமான கழகத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆளில்லா வான்வழி வாகன கண்காட்சியை தொடங்கிவைத்து வான்வழி வாகன செயல் விளக்கத்தை பார்வையிட்டார்.
கண்காணிப்பு ட்ரான், தொலைதூர கண்காணிப்பு ஆளில்லா விமானம் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடியில் அமைத்த சூரிய மின்சக்தி மையத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மேலும், உயர்கல்வித்துறையில் பணியாற்றி உயிரிழந்த குடும்பத்தினர் 34 பேருக்கு பணி நியமன அணையும் வழங்கினார். சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது.
நான் அரசியல் பேசுவதாக கருதவேண்டாம். ஆராய்ச்சி நிறுவணங்காளாக பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும் என தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பட்டம் மட்டும் நமக்கு போதாது என்றும் உயர்கல்வியில், ஆராய்ச்சியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் பெருமளவிற்கு உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…