#BREAKING: புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
பல்வேறு துறைசார்ந்த திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பல்வேறு மாவட்டங்களில் சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துறை சார்ந்த புதிய கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்.
சிறைத்துறை மற்றும் காவல்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்படி, ரூ.44.30 கோடியில் 270 காவலர் குடியிருப்புகள் மற்றும் இரண்டு காவல் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார். மார்த்தாண்டத்தில் ரூ.3.57 கோடியில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், தடய மரபனு தேடல் மென்பொருள் செயலியையும் முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.