அதிரடி நடவடிக்கை -“காவல் உதவி” செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Default Image

அவசர காலங்களில் காவல்துறை சேவையை பெறும் வகையில் “காவல் உதவி” செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

தமிழகத்தில் பொது மக்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவி மற்றும் சேவையை பெறும் வகையில் “காவல் உதவி” செயலியை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் செயலியில் தகவல் அளித்தால் துரித சேவை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அவசர காலங்களில் பெண்கள் உள்ளிட்டோர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதன் மூலம், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் பெறப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

அலைபேசி வழி அவசர கால கோரிக்கை / புகார் அளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியோர்கள் ஆகியோர் அவசர கால கோரிக்கைகள் / புகார்களை நேரடியாக தேர்வு செய்து உரிய விவரங்களுடன் புகார் தொடர்பான படங்கள்/ குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றும் செய்து, கட்டுப்பாட்டு அறையின் மூலமாக துரித சேவை பெறலாம்.

இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) அவசரமற்ற காலங்களில் பயனாளர்கள் Whatsapp / Google Map வாயிலாக, பணி / இதர பயணங்கள் செல்லும் பொழுது, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர்கள் / நண்பர்கள் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்காவல் உதவி செயலியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக “அவசரம்” உதவி பொத்தான் – பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் அவசர காலங்களில் இச்செயலியில் உள்ள சிவப்பு நிற “அவசரம்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் குறுகிய அளவிலான வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு துரித சேவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மகளிர், சிறார்கள், முதியோர் உரிய விவரங்களுடன் செயலி மூலம் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. காவல் உதவி செயலியை கூகுள் பளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார், போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்கும் பொருட்டு “Dial-100” செயலியானது காவல் உதவி செயலின் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்