CM dashboard திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

Default Image

திட்டங்களின் நிலவரம் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரடியாக கண்காணிக்கும் CM dashboard திட்டம் இன்று தொடக்கம்.

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய முயற்சியில் “CM Dashboard” என்ற புதிய திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகையை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு 360 என்ற இந்த திட்டம் மூலம், அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும், ஆட்சி நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் முதலமைச்சர் தகவல்பலகை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் முக ஸ்டாலின், அனைத்து துறை சார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் தானே நேரடியாக கண்காணிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி, முதலமைச்சர் அறையில் மின்ணணு பலகை மூலம் அரசின் திட்டங்களின் நிலையை கண்காணிக்கும் திட்டம் இன்று தொடங்குகிறது. மின்னணு தகவல் பலகையில் தேர்தல் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீதான நடவடிக்கைகள், நிதி ஒதுக்கீடு, பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

திட்டங்களின் நிலையை அறிந்து அதற்கான பணிகளை துரிதப்படுத்த மின்னணு தகவல் பலகை உதவும். 42 துறைகளின் செயல்பாடுகளையும் முதல்வர் தனது அறையில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு துறை செயலர்களும், அவர்களின் துறை சார்ந்த தகவல்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றும் தகவல் பலகையை கொண்டு வாரம் ஒருமுறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்துவர் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்