இன்று சேலம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் செல்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து வாழப்பாடி செல்லும் அவர் அரசு பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து தொடங்கி வைக்கிறார்.

அதனைத்தொடர்ந்து ஆத்தூருக்கு செல்லும் அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் வருவதையொட்டி, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்கோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்