இன்று கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
இன்று, மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது சற்று பாதிப்பு குறைந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து, இன்று, மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.