கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், முதல்வர் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வந்தார்.
இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட அரங்கமங்கலம் பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து, அங்குள்ள குடிசைவாழ் மக்கள் தங்களுக்கு நிரந்தர இடம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவர்களுக்கு மாற்று இடத்திற்கான வீட்டுமனை பட்டாவை வழங்கியுள்ளார்.