மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செயல்பட்டு வரும் Spic தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக ரூ.150.4 கோடி செலவில் 75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து இன்று வைத்தார். தினமும் 22 மெகா வாட் என ஆண்டுக்கு 42 மி.யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடையது மின்நிலையம் என்று கூறப்படுகிறது. உற்பத்தியாகும் அனைத்து மின்சாரமும் ஸ்பிக், க்ரீன் ஸ்டார் உரங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம், கலைஞர் அரங்கம் முன்பு 8 அடி உயர வெண்கலத்தால் ஆன முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவச்சிலை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், இன்று தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன தொழிற்சாலையில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.