#BREAKING: கோவை கொடிசியா கொரோனா மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
கோவை கொடிசியா வளாகத்தில் 253 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மு.கஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் சுற்று பயணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இன்று திருப்பூரில் இருந்து தனது பயணம் தொடங்கிய மு.க.ஸ்டாலின் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி போடக் கூடிய முகாமை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர் சோதனை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களிடம் அவர் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, தற்போது அவர் கோவை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மு.கஸ்டாலின் கோவை கொடிசியா வளாகத்தில் 253 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக அதிகமாக பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாக கோவை உள்ளது. கோவையில் கூடுதலாக சிகிச்சை மையங்கள் தேவைப்படுகின்ற நிலையில், அதன் அடிப்படையிலேயே கோவை கொடிசியா வளாகத்தில் கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது.