கோவையில் பொருநை அகழாய்வு கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்ட மைதானத்தில் நடைபெறும் பொருநை கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்ட மைதானத்தில் நடைபெறும் பொருநை கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மயிலாடும்பாறை, கொடுமனல், கீழடி மற்றும் பொறுமைபொருநை அகல் ஆய்வு குறித்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியக் கண்காட்சியையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த கண்காட்சி இன்று தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.