சேலத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில்,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.மேலும்,கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் தடுப்பூசி தயாரிப்பை மாநிலத்திலேயே செய்து கொள்ளவும் பல்வேறு ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
அந்த வகையில்,அடுத்த கட்ட முயற்சியாக மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று கொரோனா பரவல் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யவும்,மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில்,இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின், சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார்.
இதனையடுத்து சிறப்பு சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, திருப்பூர், கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்துகிறார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…