தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி பணிகளுக்கு இடையிலும், அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்ட முதலமைச்சர், இந்த பயணத்தின்போது மக்களையும் சந்தித்து அவர்களையும் உற்சாகப்படுத்துகிறார்.
சைக்கிள் பயிற்சி மட்டுமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதல்வர் இயந்திரங்களின் உதவியுடன் உடற்பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திலேயே அமைந்துள்ள உடற்பயிற்சி அறையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆட்சி, கட்சி பணிகளுக்கு இடையிலும் தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்ளும் முதலமைச்சர் தொடர்ந்து தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு, மக்களையும் அவ்வாறு செய்யும்படி தூண்டுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…