மாநிலத்தின் நிதி உரிமையை ‘சரண்டர்’ செய்திருக்கிறார் முதலமைச்சர் -மு.க.ஸ்டாலின்

Default Image

“கொரோனா பரவலைத் தடுப்பதிலும் – மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் தோல்வியடைந்து விட்ட முதலமைச்சர் தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசிப்பது – கானல் நீரில் விண்மீன்கள் பிடித்ததாகக் கூறுவதைப் போன்றது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி – தொழில் முதலீடுகள் இன்றியும் – வருமானத்தை இழந்தும் – வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி – தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக, “தமிழக அரசு எடுத்த முயற்சிகளால் தமிழகம், நாட்டின் முக்கிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது” என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி உண்மை நிலையைத் திரித்து, பொய்யால் திரை செய்து மூடி, தனக்குத் தானே எந்தவித நாணமுமில்லாத ஒரு “பாராட்டுப் பத்திரம்” வாசித்துக் கொண்டிருப்பது – கானல் நீரில் விண்மீன்களைப் பிடித்து விட்டேன் என்ற கற்பனையை விஞ்சுவதாக இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6.46 லட்சத்தைத் தாண்டி விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில், மாநிலத்தின் கடன் 4.56 லட்சம் கோடியைத் தாண்டி – இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. போதாக்குறைக்கு மவுனமாக இருந்து – சந்தையில் இன்னும் கடன் வாங்கிக் கொள்கிறோம் என்று ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மாநிலத்தின் நிதி உரிமையை ‘சரண்டர்’ செய்திருக்கிறார் முதலமைச்சர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்