காஞ்சிபுரத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கை கொள்ளுமாறும், அனைத்து மக்களும் தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வசதியாக, பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025